No icon

நாடாளுமன்றத் தேர்தல் - 2019

நாட்டின் நிலையும்  கிறித்தவர்களின் நிலைப்பாடும்

நாடாளுமன்றத் தேர்தல் - 2019  # Christian Votes

நாட்டின் நிலையும்  கிறித்தவர்களின் நிலைப்பாடும்

தமிழக ஆயர் பேரவை  -  கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு-புதுவை
 

கிறித்தவர்கள் நாம் இம்மண்ணின் மைந்தர்கள். இந்நாட்டின் உரிமைக் குடிமக்கள். சுதந்திரம், நீதி, சமத்துவம், மனித மாண்பு போன்ற இயேசுவின் மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள். அம்மதிப்பீடுகளை இந்திய அரசியல் சாசனமும் உறுதி செய்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெறும் மோடியரசு, நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நாட்டுக்கும், மக்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதவிர, 2014-ஆம் ஆண்டுத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளார் மோடி. எனவே, இந்த அரசு நீடிப்பதற்கான தார்மீக அடிப்படையை இழந்து விட்டது. இதனை நாம் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
அரசு சொன்னதும் செய்ததும்!
1.    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக, 2014-இல் மோடி வாக்களித்தார். ஆனால், நீர்ப்பாசன வசதி, இடுபொருட்கள், மானியங்கள், கடன் வசதி, பயிர்க் காப்பீடு, விளைச்சலுக்கு உரிய விலை இவை ஏதும் கைகூடவில்லை. மாறாக, விவசாயத்திற்கு உலைவைக்கும் பல நாசகாரத் திட்டங்களைத்தான் மோடி-எடப்பாடி ஆட்சி முன்னெடுக்கிறது. மோடியாட்சியில், விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. 2014-இல், ரூ. 3,081-ஆக இருந்த விவசாயிகளின் மாத வருமானம், 2019-இல் ரூ. 500-ஆகக் குறைந்துள்ளது.
2.    கடல் தொழில் செழிக்கும் என்றார் மோடி. ஆனால், மீனவர்களின் வாழ்வில் ஏற்றமில்லை. மாறாக, ‘சாகர்மாலா’ என்ற கடல்வழித் திட்டம் எட்டு இலட்சம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் எதிர்ப்பை மீறி இணையம் துறைமுகம் திணிக்கப்படுகிறது. இத்திட்டங்களால் கடலும் கடற்கரையும் மீனவர்களிடமிருந்;து பணமுதலைகளுக்குக் கைமாறுகிறது. சிங்களப் படையினரால் தமிழ் மீனவர்கள் அல்லல்படுகின்றனர். இயற்கைச் சீற்றங்களின்போது கூட, மீனவர்களுக்குக் கைகொடுக்க மோடியரசு தவறியது. 
3.    இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்றார் மோடி. அதற்காகத் தங்குதடையின்றி அந்நிய நிறுவனங்களுக்கு இந்திய வளங்கள் தாரைவார்க்கப்பட்டன. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்றார். ஆனால், வேலையற்றோரின் விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6 விழுக்காடாய் உயர்ந்துள்ளது. வேலைத்திறன் கொண்ட இளைஞர்களில், நான்கில் ஒருவருக்கு வேலையில்லை. நம்பிக்கையிழந்த இளைஞர்களின் தற்கொலை அதிகமாகியுள்ளது. மோடியரசோ, வேலையில்லாதோரின் தரவுகளைப் பதிவதைக் கூட, 2016-க்குப் பிறகு நிறுத்தி விட்டது. 
4.    பெண்களைக் காப்பாற்றுவோம், முன்னேற்றுவோம் என்றார் மோடி. ஆனால், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கெதிரான குற்றங்களில் பெரும்பாலானவை பா.ச.க. ஆளும் மாநிலங்களில் தான் நடந்துள்ளன. பா.ச.க. தலைவர்களே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும், அக்குற்றவாளிகளை ஆதரித்துச் சங்கப் பரிவாரங்கள் போராடுவதும், அரசு இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மோடியின் அணுகுமுறையாய் உள்ளது. 
5.    விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றார் மோடி. ஆனால், அன்றாட வாழ்க்கைக்கான நீரும், அரிசியும், பருப்பும், காய்கறிகளும், குழந்தைகளுக்கான பாலும், ஏழைகளுக்கு எட்டாத கனவாய் உள்ளன. பெட்ரோல், டீசலின் விலை மீதான கட்டுப்பாட்டை மோடி முற்றிலும் நீக்கி, அன்றாட விலை உயர்வுக்கு வழிவகுத்தார். மோடியாட்சியில், ரூ. 350ஃ-ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை, ரூ. 900ஃ-ஆக உயர்ந்துள்ளது.  கேபிள் டிவி கட்டணம் மூன்று மடங்காய் உயர்ந்துள்ளது. செல்போனில் இலவசமாய் இருந்த ஐnஉழஅiபெ ஊயடட-க்கு, மாதம் ரூ. 35ஃ- செலுத்த வேண்டிய கட்டாயமுள்ளது.
6.    கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடப்படும் என்றார் மோடி. அதற்காகவே ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்றார். அதனால், மக்கள் வங்கி வாசலில் தவம் கிடந்தனர். அடிப்படைத் தேவைகளின்றிப் பரிதவித்;தனர். ஒரு சிலர் உயிரிழந்தனர். சிறு-குறுந் தொழில்கள் அழிந்தன. நாட்டின் வளர்ச்சி 8 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடாகச் சரிந்தது. ஆனால், கறுப்புப்பணம் மட்டும் இன்னும் ஒழியவில்லை. அதேபோல், பு.ளு.வு. என்ற ஒற்றை வரியால் சிறு வணிகர்கள் தொழிலை இழந்தனர். தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வரிவிதிப்பால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக தமிழக நிதியமைச்சரே புலம்புகிறார். 
7.    ‘தூய்மை இந்தியா’ என்றார் மோடி. இத்திட்டத்தின் செலவு ரூ. 62,000ஃ- கோடி என்கிறார்கள். மோடியிலிருந்து கவர்னர் வரை, ‘கேமரா’க்கள் முன்னால், விளக்கமாற்றோடு நின்றது தான் அதன் பயனாய் முடிந்தது. பாதையோரங்களிலும், சேரிகளிலும் வறுமையில் வாழும் ஏழை மக்களின் வாழ்வை மாற்றாத மோடியின் ‘தூய்மை இந்தியா’ முழக்கம், ஏழைகளைக் கேலி செய்வதாய் அமைந்தது. தமிழகத்தை நச்சுக் குப்பை மேடாக்கும் ஸ்டெர்லைட், கூடங்குளம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை மூடுவதற்கு மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பதிலில்லை.
8.    ஊழலை ஒழிப்போம் என்றார் மோடி. ஆனால், பா.ச.க. ஆட்சியில் வியாபம் ஊழல், ரஃபேல் ஊழல், அமித் ஷா மகனின் ஊழல், எடியுரப்பாவின் ஊழல் என ஊழல் பட்டியல் நீள்கிறது. மேலும், அதானி, அம்பானி போன்ற பண முதலைகளுக்கு நாட்டின் வளங்களை அள்ளிக் கொடுக்கும் பெரும் ஊழலில் மோடி ஈடுப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஊழல் பெருசாளிகளின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கிறார். இதனால், ஊழலை ஒழிப்போம் என்ற மோடியின் முழுக்கம் வெற்று முழக்கமானது. 
சொல்லாததும் செய்ததும்!
1.    சமயச்சார்பின்மை, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுள் ஒன்று. பா.ச.க. அரசோ சமயச்சார்பின்மைக்கு எதிராய்ச் செயல்படுகிறது. பெரும்பான்மை மத அடையாளங்கள் அரசினால் முன்னிறுத்தப்படுகின்றன. ‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து ‘சமயச்சார்பின்மை’ நீக்கப்படும்; இங்கு எம்மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும், அவர் இந்துவாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். அதுவே, பா.ஜ.க. அரசின் கொள்கையும் கூட.
2.    சனநாயகம், நாகரீக சமூகத்தின் அடையாளம். சமத்துவம், கருத்துரிமை, சமூகநீதி போன்ற மதிப்பீடுகள் சனநாயகத்தின் வெளிப்பாடுகள். ஆனால், மோடியரசோ அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வோரை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கிறது; பொய் வழக்கில் கைது செய்கிறது. சங்கப் பரிவாரங்களால் சிந்தனையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். மூடநம்பிக்கைக்கு எதிரானவர்கள் தாக்கப்படுகிறார்கள். ஊடகவியலார் மிரட்டப்படுகின்றனர். தன்னாட்சி அமைப்புகளான நீதித்துறை, சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களில் மோடியரசின் அதீதக் குறுக்கீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சனநாயக மறுப்பு பா.ச.க. அரசின் ஆட்சி முறையாக உள்ளது.
3.    இந்தியா என்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆனால், மோடியின் ஆட்சி முறை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்;கிறது. ஒற்றை வரி, ஒற்றைக் கல்வி, ஒற்றைத் தேர்வு போன்றவற்றால் மாநிலங்கள் தங்கள் உரிமைகளை இழந்து நிற்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் சிதைக்கப்படுகிறது. சுதந்திரமாகச் செயல்பட்ட திட்டக் குழு கலைக்கப்பட்டு, ‘நிதி ஆயோக்’ என்ற பிரதமருக்குக் கையடக்கமான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 
4.    இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு மனிதருக்கும் மாண்புடன் வாழும் உரிமையை உறுதி செய்கிறது. மோடியரசோ இந்தத் தனியுரிமைகளில் வன்மையாகக் குறுக்கிடுகிறது. எதை உண்பது, எதை உடுப்பது, யாரை மணப்பது, எதை நம்புவது, எதைப் பாடுவது, எதை இரசிப்பது, எங்கு வாழ்வது, எங்கு செல்வது என எங்கும், எதிலும், எவர்; மீதும் தம் நம்பிக்கையைத் திணிக்கிறது.
5.    சமூக நல்லிணக்கம் இந்தியாவின் அடிநாதமாய் உள்ளது. இந்நிலையை மாற்றி, மக்களை மதத்தின் அடிப்படையில் பிளக்க முயல்கிறது மோடியரசு. மாட்டுக் கறியை வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக உத்திர பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக, குசாரத்தில் 4 தலித் இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். ஏற்கனவே வேறு மதங்களுக்கு மாறிய இந்துக்களை ‘கர் வாப்சி’ (தாய் மதம் திரும்புதல்) என்ற பெயரில் மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றும் முயற்சியில் சங்கப் பரிவார அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் சமய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மோடியரசு தன் அரசியல் இலாபங்களுக்காக, பாகிஸ்தானை வம்புக்கிழுக்கிறது.  அண்மையில், காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையும், வீரர்களின் உயிர் தியாகத்தையும் மோடி, தன் அரசியலுக்காகப் பயன்படுத்தும் செயல் கண்டனத்திற்குரியது.  
6.    தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், அது 50 விழுக்காடு உச்ச வரம்பை மீறுமென்று சாக்குச் சொன்ன மத்திய அரசு, தற்போது அரசியல் சாசனத்தையும் மீறி உயர்சாதி இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.     இன்றைய கல்வி அமைப்பை மாற்றி, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களையும், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களையும் கல்வியில் புகுத்த முயல்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் பல திட்டங்களை, ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்கள் மீது மோடியரசு திணிக்க முயல்கிறது. 
இவ்வாறு ஏழை மக்களுக்கு எதிரான, சனநாயகம், சமயச்சார்பின்மை, சமூகநீதி போன்ற அரசியல் சாசன மதிப்பீடுகளுக்கு எதிரான மோடி தலைமையிலான பா.ச.க. அரசு ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக அடிப்படையை இழந்து விட்டது. எனவே, இந்த அரசை மாற்ற வேண்டிய கட்டாயம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 
களத்தில் நிற்கும் அரசியல் அணிகள்
2019, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க. அணியில் மதவாதக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லீம் அமைப்புகள் போன்ற கட்சிகள் ஒன்றாய் நிற்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், மதவாதத்தை ஆதரிக்கும் கட்சிகள் ஓரணியிலும் மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியிலும் இணைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுதவிர, சிறிய கட்சிகள் சில களத்தில் நிற்கின்றன.

நம் நிலைப்பாடு
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், மதவாத சக்திகள் வெற்றி பெற்றால், அது நாட்டில் சனநாயக அமைப்பிற்கு முடிவுகட்டக் கூடும். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் சிதைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நமக்கு முன் உள்ள ஒரே வழி மதவாத சக்திகளின் கூட்டணியை வீழ்த்துவதேயாகும்.
இந்நோக்கத்திற்காய், மதவாத சக்திகளை முறியடிக்கும் வலிமை படைத்த சக்திகளுடன் நாம் கரம் கோர்க்க வேண்டும். சில குறைபாடுகளுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒதுக்க நேரிட்டால், அது இந்நாட்டில் மதவாதத் தீமை வெற்றி பெற வாய்ப்பாகி விடும். எனவே, தமிழகத்தில் எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க., காங்கிரசு இடம்பெற்றுள்ள ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’யை ஆதரிப்பது இன்றைய கடமையாகிறது. அதே வேளையில், ஒவ்வொருவரின் தனிமனிதச் சுதந்திரத்தை நாம் மதிக்கிறோம். நம் முடிவை யார் மீதும் திணிப்பதில்லை. இடம், பொருள், ஏவல் அறிந்து ஒவ்வொருவரும் சமூக உணர்வுடன் சரியான முடிவெடுத்து சனநாயகக் கடமையாற்ற வேண்டுகிறோம். 
நாம் செய்ய வேண்டியது…
1.    நம் நிலைப்பாட்டை மக்களுக்கு எளிய முறையில் புரியும்படி, சிறிய கையேடுகள், வெளியீடுகள், துண்டுப் பிரசுரங்கள் இவற்றை நாம் தயாரித்து, பெருமளவில் அச்சிட்டு விநியோகிக்கலாம். 
2.    நமது நிலைப்பாட்டை, நாம் அந்தந்தத் தொகுதிகளில் நேர்மறையான பரப்பலுக்கு கொண்டு செல்ல வேண்டும். மறைமாவட்;டம், பங்கு என எல்லா மட்டங்களிலும் நமது சமூக அமைப்புக்களை இதற்குப் பயன்படுத்தலாம். 
3.    ஒவ்வொரு தனிநபரையும் தனித்தனியாக அணுகுவது தேவை எனினும், நம்மோடு தொடர்புடைய குழுக்களை இனம் கண்டு, கருத்துப் பரப்பலைப் பொதுமையாக்க வேண்டும். அதற்குரிய வெளிப்படையான விவாதங்களையும் சமூகத் தளங்களில் மேற்கொள்வது சிறப்பு. 
4.    நம் நிலைப்பாட்;டை செயல்படுத்தும் போது, கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தால்,  வழிகாட்டு நெறிமுறைகளை மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 
5.    அனைத்து மதங்களையும் நாம் மதிக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் நம் சகோதர, சகோதரி ஆவர். எனவே, மதவாத எதிர்ப்பு என்பது, எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பதல்ல. மாறாக, மதத்தின் பெயரால் செய்யப்படும் அரசியலை எதிர்ப்பதே ஆகும். இந்த அணுகுமுறையை நாம் தெளிவாகப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். 
6.    கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் எவ்வகையிலும் சிறுபான்மை மதவாதத்தை ஆதரிக்க முடியாது. உலகெங்கும் சமய, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் நம் வணக்கத்திற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் முன்னோடிச் சிற்பியாய்த் திகழ்கிறார். எனவே, மதம் தாண்டிய மாந்தநேய அரசியலும், சமயச்சார்பற்ற சனநாயக அணுகுமுறையும் மட்டுமே மதவாதத்தை வீழ்த்தும் ஒரே வழி என்பதை நாம் உணர வேண்டும். 
பொறுப்புள்ள குடிமக்களாய், சனநாயகத் திசையில் நம் பயணத்தை தொடர்வோம்!

உரிய காலத்தில் உரியவற்றை செய்து, சமூகக் கடமையாற்றுவோம்!
ஓத்திசைவுக் கொண்ட தோழமை சக்திகளுடன் கரம் கோர்ப்போம்!

 

Comment